Tuesday 22 March 2011

PASI

குழந்தைத் தொழிலாளர் சட்டம்
குற்றமாம்...

வயிற்றுப் பசி தீர
வழி இல்லையாம் 
வாய்ப்பாடு வேண்டுமாம் ...



neeyaha naan

நீ பார்ப்பவை எல்லாம் 
பதிய வேண்டும் என் பார்வையில் !

நீ பேசுவதெல்லாம் 
ஒலிக்க வேண்டும் என்  நாவில்!!

உனக்கும் சேர்த்து 
சுவாசிக்க வேண்டும் இருமுறை...

மொத்தத்தில் நீ 
நானாக இருக்க வேண்டும்...

கரைந்து விடு என்னுள்
கரை படிவதுற்குள்...!!!





vilai maadhar


குழந்தைபால் அன்பு காட்டாமல்  
தவிக்க விடும் சிலப் பெற்றோர்கள் 
இருக்கும்  இவ்வுலகில்

ஒரு வேலை பால் சோற்றிற்கு 
அலைந்துப  பார்...

பொருட்பாலுக்காக  காமத்துப் பால்
எப்படி களவாடப்படுகிறது என்று......





mazhai

துளி துளியாய் 
நீ சிந்தியக் கண்ணீரில்

நனைந்தது பயிரும் வயிறும் ...

Monday 21 March 2011

kavidhai

கவிதை ......
எனக்குள் இருக்கும் மறுபக்கம்..
...
மறைந்த பக்கமும் கூட ...